மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உன்னைப்போல் ஒருவன் தொடர்ந்தும் முதலிடத்தில்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது, கமலின் உன்னைப்போல் ஒருவன்.

5. ஆறுமுகம்
சுரேஷ் கிருஷ்ணாவின் ஆ‌க்சன் கதைக்கு ரசிகர்களிடம் வரவேற்பில்லை. முதல் மூன்று நாள் இருந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் கணிசமாக குறைந்துள்ளது. ஒருவார முடிவில் 19 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி மூன்று நாள் வசூல், 5.45 லட்சங்கள்.

4. திருதிரு துறுதுறு
இந்த ரொமாண்டிக் காமெடிக்கு முதல் வகுப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சென்ற வார இறுதியில் 6.6 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 18 லட்சங்கள்.

3.நினைத்தாலே இனிக்கும்
‌விளம்பரத்தை நினைவூட்டும் இந்தப் படத்தின் சென்ற வார இறுதி வசூல், 8.14 லட்சங்கள். நான்குவார முடிவில் சென்னையில் மட்டும் இதன் மொத்த வசூல், 1.74 கோடி.

2. ஈரம்
இந்த பேய் படத்துக்கு ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு தந்திருக்கிறார்கள், சிட்டியில் மட்டும். இதன் சென்ற வார இறுதி வசூல், 16.4 லட்சங்கள். மூன்று வார முடிவில் சென்னையில் மொத்த வசூல், 1.26 கோடி.

1. உன்னைப்போல் ஒருவன்
தொடர்ந்து முதலிடத்தில் கமல் படம். இரண்டாவது வார இறுதியில் ஐம்பது லட்சத்துக்கும் குறைவாக வசூலித்த இந்தப் படம் மூன்றாவது வார இறுதியில் 50.23 லட்சங்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. சென்ற வார இறுதி வரை இதன் சென்னை வசூல் 2.68 கோடிகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.