மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி, தமன்னா நடிக்கும் பையா பரபரப்பு

ராம் கோபால் வர்மாவைப் போல் படமெடுக்க வேண்டும், அவரது கம்பெனி தயா‌ரிப்பு நிறுவனத்தைப் போல் புதியவர்களுக்கும் வித்தியாசமான படைப்புகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது லிங்குசாமியின் கனவு, லட்சியம்.

தற்போது பையா படத்தை இயக்கி வருகிறார் லிங்கு. கார்த்தி, தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் மிலிந்த் சோமன் வில்லனாக வருகிறார். இந்தப் படத்தின் கதையும் ஆர்யா நடிக்கும் சிக்குபுக்கு படத்தின் கதையும் ஒன்று என சில வாரங்கள் முன் பரபரப்பான வதந்தி ஒன்று கிளம்பியது. அது அடங்கும் முன் மற்றொரு வதந்தி.

பையா படத்தின் கதைப்படி கார்த்தி, தமன்னா இருவரும் கா‌ரில் செல்கிறார்கள். நடுவில் மிலிந்த் சோமன் லிஃப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார். உதவி கேட்டு ஏறியவர் இருவருக்கும் உபத்திரமாக மாறுகிறார். ஏன்? எப்படி? என்பது படத்தின் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் முடிச்சு.

இதே போன்ற கதையை வர்மாவின் கம்பெனி புரொட‌க்சன் தயா‌ரித்திருக்கிறது. படத்தின் பெயர் ரோட். மனோ‌ஜ் பா‌ஜ்பாய் நடித்திருந்த இந்தப் படத்தின் தழுவலே பையா என்கிறார்கள்.

சிக்குபுக்கு போல இதுவும் வெறும் புகையா? தெ‌ரியாது என்பதே இப்போதைய பதில்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.