மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> A.R.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி செ‌ன்னை‌யி‌ல்

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 11-ந் தேதி ‌கிழ‌க்கு கட‌ற்கரை சாலை‌யி‌ல் உ‌ள்ள மா‌ர்‌க் ‌ஸ்வ‌ர்ணபூ‌மி‌யி‌ல் நடைபெ‌ற உ‌ள்ளது.

‌ஷக்தி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு நி‌தி ‌திர‌ட்டு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் நடைபெறு‌ம் இ‌ந்த இசை ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் 10 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் மேடையில் 80-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இசை நிகழ்ச்சியை 30 ஆயிரம் பேர் வரை பார்ப்பதற்கு வசதி செய்யப்படுகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய பாடல்கள் மற்றும் ஹரிஹரன், சிவமணி, சாதனா சர்க்கம், பிளேஸ், பென்னி தயால் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய பாடகர்களோடு 80-க்கும் மேற்பட்ட இசை‌க் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து மார்க் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி கூறுகை‌யி‌ல், இசை வல்லுனர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷக்தி அறக்கட்டளையுடன் இத்தகைய நல்ல நோக்கத்திற்காக கைகோர்ப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆஸ்கர் விருதினை வென்றதனால் மட்டுமல்லாது, இசை உலகத்திற்கு அற்புதமான பங்களிப்புகளை வழங்கியதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையையும் மற்றும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ளச் செய்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சியின் வழியாக சென்னை இசை ஆர்வலர்களுக்கு அவரது இசையை வழங்குவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகும். இந்த மாபெரும் இசை கலைஞரை கவுரவிப்பதற்கான சிறந்த வழி இதுவே எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்தும் முதல் இசைநிகழ்ச்சி இதுவாகும். சென்னை ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் மிகச்சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகள், எல்ஈடி சுவர்கள் மற்றும் பல்வேறு பைரோடெக்னிக் தொகுப்புகள் ‌நிறை‌ந்ததாக இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி நட‌த்த‌ப்பட உ‌ள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்‌க்க வரு‌ம் ர‌சிக‌ர்க‌ளி‌ன் வசதி‌க்காக சென்னையில் உள்ள பல்வேறு பேரு‌ந்து நிறுத்தங்களில் இருந்து இலவச பேரு‌ந்துகளை இய‌க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.