மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> டிஜிட்டல் தொழிநுட்ப வளர்சியின் மைற் கற்கள்

இதோ 2009 ஆம் ஆண்டு முடியப் போகிறது. சென்ற ஆண்டை மட்டும் நாம் திரும்பிப் பார்க்காமல் இன்றைய கம்ப்யூட்டருக்கு விதை போட்ட நாள் முதல் டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அசை போட்டால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.

இதோ சில டிஜிட்டல் மைல் கற்களைப் பின்னோக்கித் தருகிறேன்.

1980

முதல் டாஸ் (Disk Operating System DOS) ஆப்பரேட்டிங் சிஸ் டம் அறிமுகமானது. டிஜிட் டல் சாதனம் என்று எடுத்துக் கொண்டால் 1978ல் சோனி தன் முதல் வாக்மேன் சாதனத்தை அறிமுகப்படுத்தியதை நினைவு கொள்ளலாம்.

1983

மேக் கம்ப்யூட்-டரில் புதிய விஷயங்-களை ஆப்பிள் நிறு-வனம் அறிமுகப்படுத்-தியது. பயன்-படுத்து-பவர்-களுக்கான எளிய இடை வழிகள் மற்றும் கம்ப்-யூட்டர் கிராபிக்ஸில் புதிய எளிய வழிகள் தரப்பட்டன.

1984

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் முதல் பதிப்பு வெளியானது. அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. வெற்றிகரமாகச் செயல்படவுமில்லை.

1986

முதல் சிடி ராம் டிரைவ் வெளியானது. நம்ப முடியாத அளவிற்கு அதிக விலையில் இருந்ததால் வரவேற்பே இல்லை.

1988

முதல் ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் வெளியானது. கைப்-பற்றிய கம்ப்யூட்டர்களில் பைல்-களையும் போல்டர்களையும் மறைத்-தது. மீண்டும் வேண்டும் என்றால் 378 டாலர் பணம் கேட்டு மக்களுக்கு மிரட்டல் வந்தது.

1989

லினக்ஸ் தந்த லைனஸ் டோர்வால்ட்ஸ் ப்ரீக்ஸ் (Freakx) என்ற பெயரில் தன் முதல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கெர்னலை வெளியிட்டார்.

1991

1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் கொடாக் சி.எஸ். 100 என்னும் டிஜிட்டல் கேமரா வெளியானது.

ஜெர்மனியில் முதல் இன்டர்நெட் சர்வீஸ் தொடங்கப்பட்டது. வழங்கியது EU net என்ற நிறுவனமாகும். இன்று 55 கோடிக்கு மேல் ஆன்லைனில் உள்ளனர்.

1993

எக்ஸ் 86 என்ற எண்களின் பெயரோடு வந்த சிப்பிற்குப் பதிலாக இன்டெல் முதல் முதலில் பென்டியம் என்ற பெயரில் சிப்பினை வெளியிட்டது.

காம்பேக்ட் பிளாஷ் கார்டுகள் வெளியாகின. 64ஜிபி வரை டேட்டா கொள்ளும் என்றாலும் சைஸ் இன்றைய கார்டுகளைப் போல் இல்லாமல் பெரிதாக இருந்தன.

1995

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. வெற்றி கரமாக இயங்கிய விண்டோஸ் இயக்கத் தொகுப்பு வெளியானது. விண்டோஸ் 95 ஆரவார விளம்பரத்துடன் உலகெங்கும் வெளியானது.

1996

கிராபிக்ஸ் உலகை கலக்கும் அனிமேஷன் சாப்ட்வேர் பிளாஷ் (ஊடூச்ண்ட) வெளியானது. இணைய உலகில் இது ஒரு சூப்பர் கலக்கலை ஏற்படுத்தியது. பின் நாளில் இது அடோப் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தனிக் கதை.

சோனி நிறுவனத்தின் வயோ லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வெளியிடப்பட்டன. உறுதியான, ஸ்டைலான ஆனால் மிகவும் திறன் கொண்ட இந்த லேப் டாப் கம்ப்யூட் டர்கள் பயன்பாட்டில் உயர்ந்திருந் தாலும் விலையில் சாமானியர்கள் பக்கம் வர வில்லை.

1997

ஐ.பி.எம். நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர் டீப் புளு (Deep Blue) செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோ வினைத் தோற்கடித்து கம்ப்யூட்டரின் திறனை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

1998
ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் புதிய தோற்றப் பொலிவு-டன் அறிமுகமாகி தங்களுக்கென ஒரு பாதையை வடிவிலும் அமைத்தன.

விண்டோஸ் 98 வெளியானது. லாஸ் வேகாஸ் நகரில் உலக அளவிலான டெமான்-ஸ்ட்ரேஷன் நடைபெற்றது. அப்போதே அது கிராஷ் ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வெட்கத்தைத் தந்தது.

2000

இன்டெல் பென்டியம் 4 வெளியானது. விண்டோஸ் எக்ஸ்பி அறி முகப்படுத்தப்பட்டது. புதிய சிறிய அளவில் எஸ்.டி.கார்டுகள் வெளியாகின.

2002
புளு டூத் தொழில் நுட்பம் அறிமுகமானது. உலகெங்கும் டேட்டா பரி மாற்றத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

மைக்ரோசாப்ட் கேம்ஸ் விளையாட எக்ஸ் பாக்ஸ் என்னும் சாதனத்தை வெளியிட்டது. 2 கோடியே 50 லட்சம் பாக்ஸ்கள் விற்றுத் தீர்ந்தது ஒரு சாதனை.

2003

ஆப்பிள் நிறுவனம் பாடல்களை விற்பனை செய்திட ஐ–ட்யூன்ஸ் என்னும் இணைய கடையைத் திறந்தது.

ஸ்கைப் அறிமுகமானது. இன்டர் நெட் வழி பேசும் பழக்கம் மக்களிடையே வெகு வேகமாகப் பரவியது. இன்று இதில் பல பரிமாணங்கள் தரப்பட்டு உலகை ஒரு குடிசைக்குள் தருகிறது ஸ்கைப். இதே போல் பல நிறுவன அறிமுகங்கள் வந்தது இதற்குப் பெருமை.

2004

பிளாக்குகள் (Blogs) உருவாகின. ஒவ்வொருவரும் இணைய வெளியில் தங்களுக்கென ஒரு மனையை உருவாக்கி நினைத்ததை எல்லாம் வெளியிடத் தொடங்கினர்.

2005

யு–ட்யூப் தளம் வெளியாகி வீடியோ படங்களுக்கு புதிய வசதியைத் தந்தது. பின் நாளில் கூகுள் இதனைக் கைப்பற்றியது.

2007

விண்டோஸ் விஸ்டா வெளியா னது. அதிகமான எண்ணிக்கயில் கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் தரப்பட்டன. ஆனால் பயன் படுத்துபவருக்குத் தலைவலிதான் அதிகமான-தாக அனைவரும் கருதினர். இன்றும் இதற்குச் சரியான வரவேற்பில்லை என்பது உண்மையே.

2008

ஐ போன் 3ஜி வெளியாகி மொபைல் உலகில் புதிய சகாப்தத்தைக் கொண்டு வந்தது. மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளதைக் காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் இருந்ததால் மக்கள் இதனையே கம்ப்யூட்டராகவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்தியாவுக்கு இதோ அதோ வருகிறேன், வருகிறேன் என்று வந்து கொண்டே......... இருக்கிறது.

நெட்புக் என்னும் லேப்டாப் கம்ப் யூட்டர் அசூஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டது. EeePC என இவை அழைக்கப்படு-கின்-றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்-படுத்தும் சி.பி.யு. மற்றும் குறைந்த விலை இதன் சிறப்பு அம்சங்களாகும்.


எழுதியவர் : கார்த்திக்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.