தென்னிந்திய படங்களின் மீது பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சமீபத்தில் இந்தியில் சூப்பர் ஹிட்டான கஜினி, வான்டட் இரண்டும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவை. இரு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த திடீர் கவனிப்புக்கு நெடுநாட்களுக்கு முன்பே இயக்குனர் பாலாவின் சேது படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் படத்தின் பெயர் தேரேநாம். விக்ரம் நடித்திருந்த வேடத்தில் சல்மான் கான் நடித்திருந்தார். படம் அங்கு சூப்பர்ஹிட். டல்லடித்திருந்த சல்மானின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கிவிட்டது.
பாலாவின் பிதாமகன் படமும் விரைவில் இந்தியில் ரீமேக்காகிறது. சதீஷ் கௌசிக் ரீமேக்கை இயக்குகிறார். பிதாமகன் வெளிவந்த போதே அதைப் பார்த்து மனதை பறிகொடுத்துவிட்டாராம் கௌசிக். இந்தியில் விக்ரம் நடித்த வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். மற்ற வேடங்களில் நடிப்பவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
விக்ரம், பாலா என்ற கூட்டணி சாதித்ததை கௌசிக், சஞ்சய் தத் கூட்டணி எட்டிப் பிடிக்குமா? சந்தேகம்தான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.