மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சச்சினுக்கு 'புட் பாய்சன்' ஏற்பட்டு தலை சுற்றி, மயக்கம்!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி லீக் போட்டிக்கு முன்பாக சச்சின் 'புட் பாய்சன்' காரணமாக மயங்கி விழுந்த செய்தி தற்போது வெளியே வந்துள்ளது. இதில் அவரது மூக்கிலும், இடது கண்ணின் கீழும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இத்தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி கடந்த 30ம் தேதி நடந்தது.

இதற்கு முந்தைய நாள் இரவு கேப்டன் டோணி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆசிஷ் நெஹ்ரா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். இரவு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிவிட்டு, தங்களது ரூமுக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது சச்சினுக்கு 'புட் பாய்சன்' ஏற்பட்டு தலை சுற்றி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேஜை மீது அவர் விழுந்துள்ளார். இதில் அவரது மூக்கிலும், இடது கண்ணுக்கு கீழும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டது.

ஆனால், மறுநாள் காலை வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டி முக்கியமானது என்பதால் மோசமான உடல்நிலையை மீறி விளையாட மைதானத்துக்கு வந்துள்ளார். அவரது நிலைமையை பார்த்த அணி நிர்வாகம் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளது.

இது குறித்து சச்சின் கூறுகையில், எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இது போன்ற ஒரு காரணத்துக்காக போட்டியை தவறவிட்டது, இது தான் முதல் முறை என்றார்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.