மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செல்வராகவன் விவாகரத்து:ரஜினி பஞ்சாயத்து

உல்லாச பறவைகளின் உறவு முறிந்தது என்று செல்வா-சோனியா விவாகரத்து பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.இயக்குநர் செல்வராகவன் -நடிகை சோனியா அகர்வால் தம்பதியினர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் முன்பே எதிர்பார்த்ததுதானே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

ஏன் முன்பே எதிர்பார்த்தார்கள்.

அடிப்படையில் செல்வராகவன் ஒரு உல்லாச பறவை. சினிமா உலகிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே அவருக்கு காதல் அனுபவம் இருந்தது. அவற்றை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படம் இயக்கிய பிறகு நடிகை செரீனுடன் காதல் வசப்பட்டார். செரீனும் செல்வாவின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் செரீனின் அம்மா உஷாராகி இருவரின் சந்திப்புகளை கட் செய்துவிட்டார்.

செல்வா அடுத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிக்க செரீனை கேட்டார். ஆனால் அவரின் அம்மா கால்ஷீட் இல்லை என்றுவிட்டார். அதன்பிறகுதான் சோனியா அகர்வாலை கொண்டு வந்தார் செல்வா.

காதல்கொண்டேன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்தே சோனியாவும், செல்வாவும் தினம் ஒரு ஹோட்டலில் மதுவுடன் இரவை கழித்து வந்தார்கள்.

இந்த விவகாரங்கள் மீடியாவுக்குள் நுழைந்தபிறகுதான் இவர்களின் மது இரவு நேரம் நீண்டது.

சோனியாவிடம் ‘நீங்க தண்ணி அடிப்பீங்களாமே..’என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம், ‘சரக்கு அடிக்கிறது சப்பை மேட்டர்...என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த எந்த சரக்கு அடிப்பேன்..எவ்வளவு அடிப்பேன்..எந்த சரக்குக்கு எவ்வளவு கிக் என்று பட்டியலே போட்டுக்கொடுத்து போட்டுத்தாக்கினார்.

இந்த மது இரவை காதல் என்று மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்தது. செல்வாவிடம், சோனியாவிடமும் காதலா என்று கேட்டபோதெல்லாம் இருவரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்ததும் கோடம்பாக்கத்தினர் சிரித்தார்கள்.

இருவருமே உல்லாசப்பறவைகள். இவர்களுக்கு கால்கட்டு போட்டால் சரிப்பட்டு வருமா என்றார்கள். அவர்கள் சொன்னதுமாதிரியே இப்போது கால்கட்டை கழட்டிக்கொண்டார்கள்.

திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்குள் தகராறுக் வந்து அது மீடியா வரை கசிந்துவிட்டது. இந்த தகராறுக்கு காரணம் தண்ணிதானாம்.

திருமணத்திற்கு பிறகு சோனியா முன்ன மாதிரியே ஹோட்டலுக்கு போய் வர கண்டிஷன் போட்டாராம் செல்வா. நீ மட்டும் போற நான் போகக்கூடாதா என்று தகராறு வலுத்திருக்கிறது.

மீடியாவுக்குள் விசயம் கசிந்ததும் இருவருமே ஒப்பந்தம் போட்டு இனிமே இந்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அப்படியும் கொஞ்சம் மீறி சோனியா சீரியல் பக்கம் வந்தார். அப்போதே கோடம்பாக்க வட்டாரத்தினர் ’புட்டுக்கிச்சி’ என்று கமெண்ட் அடித்தார்கள்.

இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக ஆவதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் சினிமா. அந்த படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுடன் செல்வா நெருக்கம் காட்ட காட்டமாயிருக்கிறார் சோனியா. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார். அடக்கி வாசிக்க மறுத்திருக்கிறார். டிஷ்யூம் அளவுக்கு இருவருக்குள்ளும் இந்த விவகாரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி, பெண் கொடுத்த வீட்டு விவகாரமாயிற்றே என்று மிகவும் கவலை பட்டிருக்கிறார்.

தான் மட்டுமல்ல யார் சொல்லியும் கேட்கும் நபர்கள் இல்லை செல்வாவும், சோனியாவும் என்பது ரஜினிக்கு தெரியும். அதிலும் செல்வாவோ சொல்லவே வேண்டாம்.

ஆனாலும் இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.

இருவரையும் கூப்பிட்டு பேசுவது என்பது நடக்குற காரியமல்ல என்பதை புரிந்துகொண்ட ரஜினி, நேரில் பேசினால் நீ சொல்வது என்கிற மாதிரி உதாசீனப்படுத்திவிடுவார்கள் என்று இருவரிடமும் தனித்தனியே போனில் பேசியிருக்கிறார்.

சொல்லிவைத்தது மாதிரியே இருவரும் சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கு அப்போதே புரிந்துவிட்டதாம் இந்த விவகாரம் விவகாரத்தில் முடியப்போகிறது என்று.

அது மாதிரியே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள்.


குழந்தை பிறந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். அது தள்ளிப்போனது....இது நெருங்கிவிட்டது என்று புலம்புகிறாராம் கஸ்தூரிராஜா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.