விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு வாலிபன் படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி வாலிபனை தயாரிக்கிறார்.
படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார்? ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, இலியானா என அரை டஜன் பெயர்களை அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால், சிம்புவின் சாய்ஸ் அருந்ததி அனுஷ்கா என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
சமீபத்தில் அனுஷ்காவுக்கு, உங்களுடன் பேச வேண்டுமே என்று எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் சிம்பு. இதற்கு உடனடியாக அனுஷ்காவிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. பிறகு போனிலேயே வாலிபன் படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார் சிம்பு.
நமக்கு கிடைத்த தகவல்படி, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் அனுஷ்கா. அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வேட்டை ஆரம்பமா?
ReplyDelete