ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த சரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரக்த சரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி பரிட்டால ரவியை பற்றியது. இதில் பரிட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூரியாக சூர்யா நடிக்கிறார்.
ரக்த சரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூரிலிருந்துதான் பரிட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாக வர்மா சித்தரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.
அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.