கலை இரவு என்றால் காத தூராம் ஓடுகிறவர் ரஜினி. அவர் வேண்டி விரும்பி ஒரு நட்சத்திர கலை இரவில் கலந்து கொண்டிருக்கிறார்.
சில வாரங்கள் முன் பெய்த மழை ஆந்திராவை துவைத்து எடுத்தது. லட்சக்கணக்கானவர்கள் வீடு இழந்தனர். மழை பலரது உயிரை பறித்தது. ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட பலரும் முயற்சி எடுத்த நிலையில் நட்சத்திரக் கலை இரவு நடத்துவதென ஆந்திர திரையுலகம் முடிவு செய்தது. தமிழக கலைஞர்கள் இல்லாமல் நட்சத்திர கலை விழாவா? அவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த நட்சத்திரக் கலை இரவில் ரஜினி, சூர்யா, ராதாரவி போன்றேhர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூபாய் பத்து லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
சூர்யா ஐந்து லட்சமும், விஷால் 2.5 லட்சமும், விஜய் 2 லட்சமும், ஜெயம் ரவி ஒரு லட்சமும் நிதி அளித்துள்ளனர். விழாவில் பேசிய ரஜினி, எனது குரு தாசரி நாராயண ராவ் அழைத்ததால் இங்கு வந்தேன். ஆந்திர மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது, நான் அவர்களுடன் இருப்பேன் என்று தெரிவித்தார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.