முதல் முறையாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இரண்டு நாள் மாநாடு மற்றும் கருத்தரங்கு நடத்துகிறது. நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கமல்ஹாசன் உள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இப்படியொரு மாநாடு நடத்துவது இதுவே முதல் முறை. கமல்ஹாசனின் தனிப்பட்ட முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.
இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி 50 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மேலும், 18 ஆம் தேதி மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கில் உலகம் முழுவதிலிருந்தும் வரும் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். சினிமா குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல், இந்த மாநாட்டில் ரஜினி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வதாக கூறினார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.