மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> திரைப்பட நகரம் - முதல்வர் உறுதி

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் தொடர்பான வர்த்தக மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் விழாவுக்கு தலைமை தாங்க, தமிழக முதல்வர் மாநாட்டை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய கருணாநிதி,

28வது வயதில் திரையுலகில் நுழைந்த நான் இப்போதும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வருகிறேன், அதில் கிடைக்கும் பணத்தை அடித்தட்டு மக்களுக்கும், அருந்ததிய மாணவர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் வழங்குகிறேன் என்றார். மேலும், தன்னைப்போல் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

திரைத்துறைக்கு திமுக அரசு தந்த சலுகைகள், கட்டண‌க் குறைப்புகள், திரைத்துறையினருக்கு விருதுகள் ஆகியவற்றையும் முதல்வர் பட்டியலிட்டார். நமது ஸ்டுடியோக்கள் உலகத் தரத்திலானவை என்றவர், “பொழுதுபோக்கு தொழில்களில் உலக அளவில் தமிழகம் முக்கிய மையமாக திகழ வேண்டும் என்பது என் கனவு. இது நனவாக எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.

திரைப்பட நகரம் அமைக்க தேவையான வசதிகள் செய்துதர தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்த தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னிலை வகித்தவர் இந்திப்பட தயா‌ரிப்பாளர் யாஷ் சோப்ரா. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.