குரு - சிஷ்யன், அண்ணன் - தம்பி... இந்த இரண்டு காம்பினேஷனும் பொங்கலுக்கு எதிரெதிராக மல்லுக்கட்டுகிறது. வெற்றி யாருக்கு? பொங்கல் வரை பொறுத்திருப்போம்.
தனுஷ் நடித்திருக்கும் குட்டி பொங்கலுக்கு வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஆரியா படத்தின் ரீமேக் இது. இயக்கியிருப்பவர் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர்.
யாரடி நீ மோகினியும் தெலுங்கில் வெளியான ஆடவாரி... படத்தின் ரீமேக்தான். இந்தப் படத்தை தெலுங்கில் இயக்கியவர் செல்வராகவன். தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய மித்ரனுக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணம், மித்ரன் செல்வராகவனின் அசிஸ்டெண்ட்.
குட்டி வெளியாகும் அதே நாள் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனும் வெளியாகிறது. வெற்றி பெறப்போவது குருவா சிஷ்யனா? அண்ணனா தம்பியா?
குட்டி ஆடியோ வெளியீட்டு விழாவில் இதை ஒரு கேள்வியாகவே மித்ரனிடம் முன்வைத்தனர். ஆயிரத்தில் ஒருவனும், குட்டியும் வேறுவேறு என்றவர், நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவன் குட்டிக்கு போட்டியில்லை என்றார்.
ஜெமினி லேபில் நடந்த இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மித்ரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என சொற்ப பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.