Sunday, December 27, 2009

> தமிழ் படம் பிரஸ்மீட்

தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் தயா‌ரித்திருக்கும் படம், தமிழ் படம். விளம்பரப் படங்களை இயக்கிவந்த சி.எஸ்.அமுதன் படத்தை இயக்கியிருக்கிறார் மிர்ச்சி சிவா ஹீரோ.

க‌ல்லூரியில் படிக்கும் சிவாவின் நண்பர்கள் யாரென்றால் அதே கல்லூரியில் படிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா. இதிலிருந்தே படம் எப்படிப்பட்டது என்பதை பு‌ரிந்து கொள்ளலாம். தமிழ்ப் படங்களில் வரும் குளறுபடிகளை ஈவு இரக்கம் இல்லாமல் ரவுண்டுகட்டி கிண்டலடித்திருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குன‌ரிடம் கேட்டதற்கு, “தமிழ் சினிமாவை கொண்டாடும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. எந்த நடிகரையும் இது புண்படுத்தாது. மாறாக எல்லோரையும் சி‌ரிக்க வைக்கும்” என்றார்.

படத்தை தயா‌ரித்திருக்கும் தயாநிதி அழகி‌ரி பேசுகையி‌ல், நடிக்கிற ஆர்வம் இல்லை, ஆனால் படம் இயக்குகிற விருப்பம் இருப்பதாக‌த் தெ‌ரிவித்தார்.

கண்ணன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஜனவ‌ரியில் படம் திரைக்கு வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.