படத்தை தொடங்குவதற்கு முன் படத்தின் பெயரை தேர்வு செய்வது மரபு. பெயரை அறிவித்துவிட்டுதான் படப்பிடிப்புக்கே கிளம்புவார்கள். மணிரத்னம் சற்று வித்தியாசம். பெயரையோ, நடிகரையோ முறைப்படி அறிவிப்பதில்லை. ஆனால் இந்த இரண்டும் எப்படியேனும் கசிந்து மீடியாவின் காதுகளுக்கு வந்துவிடும்.
சசிகுமார் இதிலிருந்தும் மாறுபட்டிருக்கிறார். முதல் படம் சுப்பிரமணியபுரத்தை இயக்கும்போது, படத்தின் பெயரை அறிவித்துவிட்டுதான் தொடங்கினார். ஆனால், இரண்டாவது படத்தை எந்த அறிவிப்பும் இல்லாமல் தொடங்கியிருக்கிறார். இந்த புதிய படத்தை விக்ரமின் ரீல் லைஃப் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
சென்னையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. முக்கியமான வேடத்தில் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான வேடம் சமுத்திரக்கனிக்கு. இவர்கள் தவிர மேலும் எட்டு கதாபாத்திரங்கள் இருக்கிறது.
பட வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார் சசிகுமார். படப்பிப்பு முடிந்த பிறகே படத்துக்கு பெயர் வைப்பது என்பது அவரது முடிவாம். ஆக, பெயரில்லாமலே தயாராகி வருகிறது சசியின் புதிய படம்.

Round Katti Kalakkuvaar SasiKumar
ReplyDelete