Sunday, December 27, 2009

> சர்வதேச திரைப்பட விருதுகள் சென்னை

ஐசிஏஎஃப் ஒவ்வொரு வருடமும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாட்டு திரைப்படங்கள் கலந்து கொள்ளும்.

இந்தமுறை சிறந்த தமிழ் திரைப்படத்துக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விருது நடுவர் குழு விருதுக்கு தேர்வான படங்களை அறிவித்தது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி வெளிவந்த அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றது. இரண்டாவது இடத்தை பாண்டிரா‌ஜின் பசங்க கைப்பற்றியது.

பொக்கிஷம் படத்திற்காக ஒளிப்பதிவாளர் ரஜேஷ் யாதவ் சிறப்பு நடுவர் விருதை பெற்றார். அடுத்த வருடமும் இந்த விருதுகள் அளிக்கப்படும் என்றனர் ஐசிஏஎஃப் நிர்வாகிகள்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.