மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அமீர் - முழுநேர நடிகர்?

யோகி படம் வெளியாகும்முன் படத்தின் சில காட்சிகளை ஜெயம் ரவி குடும்பத்துக்கு திரையிட்டு காட்டினார் அமீர். அமீ‌ரின் கண்ணபிரான் படத்தில் ஜெயம் ரவி நடிக்கயிருப்பதால் இந்த ஸ்பெஷல் திரையிடல்.

படத்தைப் பார்த்த எடிட்டர் மோகன் உள்பட அனைவரும், கண்ணபிரானிலும் ஒரு கேரக்டர் அமீர் பண்ண வேண்டும் என்று வற்புறுத்தினர். படம் எடுக்கும்போது பார்க்கலாம் என தட்டிக் கழித்தார் அமீர்.

இப்போது நிலைமை தலைகீழ். யோகி வெளியான நிலையில் அமீ‌ரின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவரது நண்பராக நடித்த சினேகன் முழுநேர நடிகராவதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார். அமீர் மட்டும் சும்மாயிருப்பாரா?

துபாய் திரைப்பட விழா முடிந்து வந்ததும் கண்ணபிரானை தொடங்கயிருக்கிறாராம். தில்லாலங்கடி, பிரபுதேவாவின் இச் என்று பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி உடனே கால்ஷீட் கொடுத்தால் ஓகே. இல்லையென்றால், அவரை தூக்கிவிட்டு தானே ஹீரோவாக நடிக்கும் முடிவிலிருக்கிறாராம்.

கண்ணபிரானின் திருவிளையாடல்களை காண காத்திருக்கிறது கோடம்பாக்கம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.