மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அறுவடை - ஜனவ‌ரியில்

தை பிறந்தால் வழி பிறக்கும்ங்கிறது உண்மைதான். தள்ளிப் போய்க் கொண்டிருந்த அறுவடை படம் தையில்தான் வெளியாகிறது.

மம்முட்டி, அர்ஜுன், சினேகா நடித்திருக்கும் அறுவடையை அரவிந்த் இயக்கியிருக்கிறார். மம்முட்டி இருப்பதால் வந்தே மாதரம் என்ற பெய‌ரில் படத்தை மலையாளத்திலும் வெளியிடுகிறார்கள்.

இதுவரை அரை டஜன் ‌ரிலீஸ் தேதி அறிவித்தும் படம் வெளிவரவில்லை. இறுதியாக ஜனவ‌ரியில் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பைலட்டாக சினேகாவுக்கு வித்தியாசமான வேடம். அர்ஜுன் போலீஸ் அதிகா‌ரி. விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் பிளஸ். குடியரசு தினமான ஜனவ‌ரி 26 படம் திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.