மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேட்டைக்காரன் மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஏவிஎம் தயா‌ரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம். விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா.
“நாட்டில் தீயவர்கள் பெருகிவிட்டால் நல்லவர்கள் தலையெடுத்து அவர்களை களையெடுக்க வேண்டும். அதற்காக ஒருவன் தனது வேட்டையை ஆரம்பிக்கிறான். அவனது வேட்டையால் தீயவர்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் வேட்டைக்காரனின் கதை” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் பாபு சிவன்.

பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு போலீஸுக்கு போவார்கள். அந்த போலீஸே அநியாயமாக நடந்து கொண்டால்...? இந்த கேள்விக்கு விஜய் விடை தேடும் எபிசோடும் இந்தப் படத்தில் இருக்கிறதாம்.

அனுஷ்கா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக வருகிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபு‌ரியும் அவருக்கும், விஜய்க்குமான சந்திப்பு மோதலில் நடந்து பிறகு காதலாக மலர்கிறது. விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் நான் அடிச்சா தாங்க மாட்ட, புலி வருது உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகியுள்ளன.

கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். விஜய்யின் ஓபனிங் பாடலில் அவரது மகன் சஞ்சய்யும் உடன் ஆடியிருக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு, எடிட்டிங் வி.டி.விஜயன். மிலன் கலை இயக்குனராக பணிபு‌ரிந்திருக்கிறார்.

புனே, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பாடல் காட்சிகளை எடுத்துள்ளனர். விஜய், அனுஷ்கா ஆடிய குத்துப்பாட்டை ஏவிஎம்-மின் பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை வாங்கியிருப்பது சன் பிக்சர்ஸ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.