மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கிளாமர் ரீமா சென்

ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த பிறகு ‌‌ரீமா சென்னை எல்லோரும் கிளாமர் சென் என்றுதான் அழைப்பார்கள். அந்தளவுக்கு கவர்ச்சி காட்டாறாக பிரவாகம் எடுத்திருக்கிறாராம் ஆயிரத்தில் ஒருவனில்.

செல்வராகவனின் இந்த காஸ்ட்லி படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ச‌ரித்தர காலத்து நிகழ்வுகளும் படத்தில் இடம்பெற்றிருப்பது முக்கியமான அம்சம். ‌ரீமா சென், ஆண்ட்‌ரியா இருவரும் ஹீரோயின்கள்.

இதில் ராணுவ அதிகா‌ரியாக நடித்திருக்கிறார் ‌‌ரீமா சென். ஆனாலும், மிலிட்ட‌ரி உடையைவிட கிளாமர் உடையில்தான் அதிகம் படத்தில் தோன்றுகிறாராம். இதுவரை இல்லாத அளவுக்கு என்று அழுத்தி சொல்கிறது பட யூனிட். மேலும், விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஸ்டில்களிலும் ‌ரீமா செம தாராளம்.

இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா?

எல்லை மீறாமல் நடித்திருக்கிறேன். இதில் எனக்கு என்ன பிரச்சனை என்று எதிர் கேள்வி கேட்கிறார் ‌‌ரீமா சென். பார்ப்போம் சென்சார் என்ன செய்கிறதென்று.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.