Monday, December 21, 2009

> எட்டுகால் பாய்ச்சலில் பரணி

நாடோடிகள் படத்தில் நண்பனாக வரும் பரணியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். நண்பனாக வந்தவர் அரை டஜன் படங்களிள் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

பரணி நடித்திருக்கும் விலை விரைவில் திரைக்கு வருகிறது. இது தவிர தூங்கா நகரம், பொடிப்பசங்க, வெள்ளைக் குதிரையில் ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் தூங்கா நகரம் படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் கம்பெனி தயா‌ரிக்கிறது.

வெள்ளைக் குதிரையில் ராஜகுமாரன் படத்தை திலீபன் இயக்குகிறார். ராமசாமி பொடிப்பசங்க படத்தை இயக்குகிறார். இவை தவிர சரவண ‌‌ஜீவன் இயக்கும் ப‌ரிமளா திரையரங்கம் படத்திலும் பரணிக்கு முக்கியமான கேரக்டர்.

ஹீரோ வேடத்துக்கு காத்திருக்காமல் கிடைக்கிற படங்களில் நடிப்பதால்தான் இத்தனை படங்கள். சந்தோஷமா இருக்கேன் என்று பூ‌ரிக்கிறார் பரணி.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.