மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிப்பில் கமல்

கமல்ஹாசனின் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிக்கிறது. காமெடி‌‌ப் படமான இதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் ச‌ரித்திரப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. படத்தின் கதை மற்றும் ஸ்கி‌ரிப்ட் உருவாக்கும் பணி நீண்டுகொண்டே செல்வதால் அதற்குமுன் குறுகியகால தயா‌ரிப்பில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். காமெடி படமாக இது இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்க உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிக்கிறார். கமல் ஜோடியாக அனேகமாக தமன்னா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.