Wednesday, December 23, 2009

> சென்னை 600 028 பார்ட் 2.

சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு.

வெங்கட்பிரபு நடிப்புக்கும் இசைக்கும் நடுவில் தத்தளித்தபோது, அவரது தனித்தன்மையை வெளிப்படுத்திய படம், சென்னை 600 028. வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பர் எஸ்.பி.பி.சரண் இந்தப் படத்தை தயா‌ரித்திருந்தார். வெங்கட்பிரபு என்ற சிறந்த இயக்குனரை இந்தப் படம் அடையாளம் காட்டியது.

கோவா படத்துக்குப் பிறகு அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா தயா‌ரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். நடிகர், படத்தின் பெயர் எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

இதையடுத்து எஸ்.பி.பி.சரண் தயா‌ரிப்பில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். நட்சத்திர நடிகர் ஒருவர் இந்தப் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. காமெடியன் யாரு, பிரேம்‌ஜிதானே?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.