Thursday, December 24, 2009

> வேட்டைக்காரன் - வேட்டு வைக்கும் வதந்தி

விஜய் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது வேட்டைக்காரன். விஜய் தரப்பு இதை பாஸிடிவ்வாக பேசிக் கொண்டிருக்க, அதையே எதிர்மறையாக விமர்சனம் செய்கிறது இன்னொரு கோஷ்டி.

பொங்கலுக்கு தீராத விளையாட்டு பிள்ளை, குட்டி, கோவா என்று எதிர்பார்ப்புக்குரிய நிறைய படங்கள் வெளியாகின்றன. இதில் ஒன்றிரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்கிறார்கள். வேட்டைக்காரன் படத்தை தூக்கிவிட்டுத்தான் இந்தப் படங்களை திரையிடயிருக்கிறார்களாம்.

ஆக, அதற்குள் கல்லா கட்டியாக வேண்டும். அதை மனதில் வைத்தே அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்களாம்.

வேட்டைக்காரன் ஓடும் திரையரங்குகளில் 'குட்டி' படத்தின் ட்ரெய்லரைப் பாருங்கள் என்று பத்திரிக்கையில் விளம்பரமே செய்கிறார்கள். பொங்கலுக்கு இதுவே, வேட்டைக்காரன் திரையரங்கில் குட்டி படத்தைப் பாருங்கள் என்று மாறப் போகிறது என தொடை தட்டுகிறார்கள் விமர்சனம் செய்பவர்கள்.

யார் என்ன சொன்னாலும், சுக்கான் இருப்பது சூரியன் (சன்) கையில் அல்லவா!

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.