யுவன் ஷங்கர் ராஜாவும் செல்வராகவனும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பகையை மறந்து மனம்விட்டுப் பேசியுள்ளனர்.யுவன் - செல்வா கூட்டணியின் இசையும், பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. இருவரும் பிரிந்தது இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. யுவனுக்குப் பதில் ஜி.வி.பிரகாஷை தனது ஆயிரத்தில் ஒருவனில் பயன்படுத்தினார் செல்வா. ஆனால் செல்வாவுக்கு அது திருப்தியாக இல்லை.
விக்ரமை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு இந்தி இசையமைப்பாளரை பயன்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளிவந்தது.
இந்நிலையில் யுவனும், செல்வாவும் சென்னையில் உள்ள கிளப் ஒன்றில் சந்தித்து உரையாடினர். சோனியா அகர்வாலின் முயற்சியால் ஆயிரத்தில் ஒருவன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு யுவன் வந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புக்குப் பிறகு மனஸ்தாபம் விலகியதாகவும் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பிரகாசமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்போது மனஸ்தாபம் விலகியதா என்பதற்கான விடை கிடைத்துவிடும்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.