Saturday, December 19, 2009

> வேட்டைக்காரன், அவதார் மோதல்

நேற்று வேட்டைக்காரன் ‌ரிலீஸ். சன் பிக்சர்ஸ் வெளியிடும் இந்தப் படம் சென்னையில் மட்டும் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. போட்டிக்கு ர‌ஜினி, கமல் தொடங்கி அ‌ஜித், விக்ரம் வரை எந்த நடிக‌ரின் படமும் இல்லை. ஆனால், ஹாலிவுட் படம் ஒன்று இருக்கிறது, அவதார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைட்டானிக் படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளியில் இந்தப் படம் வெளியாவது ஒரு காரணம். படத்தின் கிராஃபிக்ஸ் மிரட்டல்கள் இன்னொரு காரணம்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான 2012 நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து ஓடியது குறிப்பிடத்தக்கது. அவதாருக்கு 2012 விட அதிக எதிர்பார்ப்பு நிலவுவதால், வேட்டைக்காரனுக்கு போட்டியாக அதனை கருதுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

வேட்டைக்காரன் 23 திரையரங்குகளில் வெளியாகிறது என்றால், ஹாலிவுட் மிரட்டல் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாலிவுட் படமொன்று இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

ரசிகர்கள் யாருக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது இன்னும் மூன்று தினங்களில் தெ‌ரிந்துவிடும்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.