மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்டோஸ் 8ம் கூகிள் தேடலும்

விண்டோஸ் 7 வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், அதற்குள் விண்டோஸ் 8 ? என்ற கேள்விக் குறி எழலாம். ஆம், அடுத்த திட்டத்திற்குத் தயாராவது தானே அமெரிக்க நிறுவனங்களின் வாடிக்கை. அந்த வகையில் விண்டோஸ் 8 பதிப்பு தொடங்க மைக்ரோசாப்ட் அடுத்த ஜூலையைக் குறித்துள்ளது.

இந்த திட்டத்தில் ஈடுபடுத்த மைக்ரோசாப்ட் ஏழு முறை புதிய வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுத்த சில நாட்களில், அது எடுக்கப்பட்டுவிட்டாலும் பலர் இதனைக் கவனித்து மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து அறிந்துள்ளனர். அநேகமாக 2012ல், விண்டோஸ் பதிப்பு 8 வெளி வரலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 128 பிட் என்ற அடிப்படை அளவில் செயல்படும் சிஸ்டமாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு.

2009 இல் கூகிளில் அதிகம் தேடப்பட்டவர்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டில் கூகுள் தளம் மூலம் அதிகம் தேடப்பட்டது என்ன விஷயம்? அல்லது யாரை? என்று அந்த தளத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. நூறு கோடிக்கு மேல் தேடல்கள் இருந்தாலும், அவற்றில் மீண்டும் மீண்டும் தேடப்பட்டவற்றை வடிகட்டியும், தேவையற்ற முறையிலும், நோக்கமின்றியும் தேடப்பட்டவற்றை நீக்கியும் தேடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல் தனி நபர் குறித்த தேடல்களும் ஆய்விலிருந்து நீக்கப்பட்டன. பின் கிடைத்தவற்றை ஆய்வு செய்ததில் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன.

உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் இந்த ஆண்டில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் தான். அடுத்த இடத்தைப் பிடித்தது பேஸ்புக். இதற்குப் பின்னால் அணிவகுப்பவை – Twitter, sanalika, new moon, lady gaga, windows 7, dantri.com.vn and torpedo gratis ஆகும். பொழுது போக்கு என்ற பிரிவிலும் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார். சாப்பாடு பிரிவில் acai berry முதல் இடத்தைப் பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.