மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஹெலிகாப்ட‌ரில் டூயட்

லண்டனிலும், சென்னையிலும் வளர்ந்து வருகிறது மறுபடியும் ஒரு காதல். மருத்துவக் கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதையாம் இது.

பல மலையாளப் படங்களில் நடித்த அனிருத் மறுபடியும் ஒரு காதல் மூலம் தமிழுக்கு வருகிறார். படத்தில் இவர்தான் ஹீரோ. லண்டனை சேர்ந்த ஜோஸ்னா, கேரளாவைச் சேர்ந்த வாணி கிஷோர் என்று இரு நாயகிகள்.

லண்டனில் தொடங்கும் கதை சென்னையில் தொடர்ந்து கிளைமாக்ஸ் லண்டனில் முடிவதுபோல் கதை அமைத்திருக்கிறார்கள். டாக்கி போர்ஷன் மட்டுமின்றி பாடல் காட்சியும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள கெனே‌ரிவாப் பகுதியில் கதாநாயகி ஜோஸ்னா ஹெலிகாப்ட‌ரில் பறந்து கொண்டே, காதலா காதலா கவிஞன் நீ, கவிதை நான் என்று பாடும் பாடல் காட்சியை பல நெருக்கடிகளுக்கு நடுவில் படமாக்கியிருக்கிறார்கள்.

கனெக்ட் பிலிம் மீடியா மறுபடியும் ஒரு காதலை தயா‌ரித்து வருகிறது. தயா‌ரிப்பாளர் வாசு பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.