இ.எஸ்.கே. பிலிம்ஸ் புரொடக்சன் சார்பில் ராஜா தயாரித்திருக்கும் படம் கந்தகோட்டை. இதனை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் வாங்கி விநியோகிக்கிறார்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்குப் பிறகு நகுலன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி பூர்ணா. படத்தை இயக்கியிருப்பவர் சக்திவேல். ராதாமோகன், ப்ரியா வி. ஆகியோரிடம் பணிபுரிந்த சக்திவேலுக்கு இது முதல் படம்.
கந்தகோட்டை என்ற இடத்தில் நடக்கும் கதையிது. கந்தகோட்டையில் வசித்து வருகிறார் நகுலன். அங்கு விடுமுறைக்காக வருகிறார் பூர்ணா. இருவருமே எதிரெதிர் குணங்கள் கொண்டவர்கள். நகுலன் காதலை வெறுப்பவர். பூர்ணா மதிப்பவர். இவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பது கதை.
“எதிர்பார்த்த ரிசல்ட் வருவதற்காக நகுலன் கடுமையாக உழைத்திருக்கிறார்” என்று சொல்லும் சக்திவேல், பூர்ணாவின் நடிப்பையும் புகழ்கிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கும் போது, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதாவது ஒரு பட எக்ஸ்பீரியன்ஸ். ஆனால், அப்படி தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தினா இசை. கபிலன், விவேகா, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு இ.கிருஷ்ணமூர்த்தி. அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.