விஜய் டிவி உலகநாயகன் கமல் 50 நிகழ்ச்சியை நடத்திய பிறகு அந்த சேனலின் விருப்பத்துக்குரியவராக மாறியிருக்கிறார் கமல். தொலைக்காட்சி வந்த நேரம், தொலைக்காட்சியால் சினிமா அழிந்துவிடும் என்று திரைத்துறையினர் அனைவரும் போராட்டம் நடத்தினர். அதில் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர் கமல் மட்டுமே. எந்த டெக்னாலஜியையும் ஒதுக்கக் கூடாது, ஒதுக்க முடியாது என்பது கமலின் நிலைப்பாடு.
தொலைக்காட்சியை சினிமாவுக்கு சாதகமாகப் பயன்படுத்தியதில் கமலுக்கு கணிசமான பங்குண்டு. சரி, விஷயத்துக்கு வருவோம். கமலை வைத்து ஒரு புரோகிராம் தயாரிக்கும் தனது விருப்பத்தை விஜய் டிவி கமலிடம் தெரிவித்திருக்கிறது. ஹிந்தியில் அமிதாப் நடத்தினாரே குரோர்பதி நிகழ்ச்சி... அதுமாதிரி ஒரு நிகழ்ச்சியாம்.
இந்த ஐடியாவுக்கு கமலும் சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. 'குரோர்பதி' உச்சத்தில் இருந்த போது, அமிதாப் மாதிரி நிகழ்ச்சி நடத்துவீர்களா என்று கமலிடம் கேட்டதற்கு, அதுதான் அமிதாப் பண்ணுகிறாரே என்று பதிலளித்தவர், எதுமாதிரியும் இல்லாமல் புதிய நிகழ்ச்சி என்றால் யோசிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அந்த யோசனையை விஜய் டிவிக்காக மீண்டும் துசு தட்டியிருக்கிறாராம் கமல். இது உண்மையா என்பது புத்தாண்டில் தெரிந்துவிடும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.