பொது உடமைக்காரரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரேயொருமுறைதான் புரட்சி என்ற வார்த்தையை பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் காதல் பாடலில். நான் கருங்கல் சிலையோ, காதல் எனக்கில்லையோ என்று வரும் அந்தப் பாடலில் பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ என்று எழுதியிருந்தார்.
ஆனால், இன்று படமெடுப்பவர்கள் எல்லாம் புரட்சியை மையமாக வைத்தே கதை எழுதுகிறார்கள். படப் பூஜையின் போது, இந்தப் படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று சொல்லாத இயக்குனர்கள் இருக்கிறார்களா? அப்பாவி படத்தின் இயக்குனர் ரகுராஜும் அப்படிதான் கூறுகிறார்.
தமிழ் பத்திரிகையொன்றில் 5 வருடங்கள் பணிபுரிந்த இவர் தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் படங்கள் இயக்கிவிட்டு இறுதியாக தமிழுக்கு வந்திருக்கிறார். புரட்சி விதையை விதைக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதாக கூறும் இவர் இந்தப் படத்தில் உண்மையாகவே ஒரு புரட்சி செய்திருக்கிறார்.
பொதுவாக குத்துப் பாடலில் வார்த்தை தோரணம் மட்டுமே இருக்கும். கருத்துக்கு இடமிருக்காது. ஆனால் 'அப்பாவி'யில் வரும் குத்துப்பாடலில் இளைஞர் முன்னேற்றத்துக்கான கருத்துகளை தொகுத்து அளித்திருக்கிறார்கள்.
ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் 4 பாடல்களை நா.முத்துகுமாரும், ஒரு பாடலை வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.