மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜெனிலியாவின் டார்லிங்

அழகான, திறமையான நடிகை. ஆனாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது காணாமல் போகிறவரும் ஜெனிலியாவாக‌த்தான் இருக்கும். சந்தோஷ் சுப்பிரமணியத்துக்குப் பிறகு ரசிகர்களை தவிக்கவிட்டவர் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

ஜெனிலியா தெலுங்கில் நடித்த ரெடி படத்தை தமிழில் ‌ரிமேக் செய்வதும், தனுஷ் ஹீரோவாக நடிப்பதும் பலமுறை அரைத்த செய்தி. தமிழிலும் ஜெனிலியாதான் ஹீரோயின். ரெகமண்ட் செய்தவர் தனுஷ் என்கிறார்கள் டீப்பாக மோப்பம் பிடிப்பவர்கள்.

தமிழ், தெலுங்கைவிட இந்தியில் நடிப்பதை‌த்தான் ஜெனிலியா அதிகம் விரும்புகிறார். இது உண்மையா என்று யாரேனும் கேட்டால் மற்ற நடிகைகளைப் போல, இது திட்டமிட்ட வதந்தி என்றெல்லாம் பின்வாங்குவதில்லை. திடமாக உண்மைதான் என்கிறார் இந்த பாய்ஸ் ஹீரோயின்.

இந்தி நடிகர் ‌ரித்தீஷ் தேஷ்முக்கை பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின்னும் ஆழமாக காதலிக்கிறாராம் ஜெனிலியா. தென்னகம் வந்தால் அவருடன் போனில்தான் பேச முடியும். இந்திப் படத்தில் நடித்தால் முகம் பார்த்தே பேசலாம். ஜெனிலியா தமிழ், தெலுங்கில் அதிக ஆர்வம் காட்டாததற்கு இதுதான் காரணமாம்.

பேசாமல் கல்யாணம் பண்ணிக்கலாமே?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.