மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> V.C குகநாதனுக்கு கடும் கண்டனம்

வி.சி.குகநாதன் பெப்சி தலைவரான பிறகு கட்ட பஞ்சாயத்து செய்பவர் போல் நடந்து கொள்கிறார் என்று திரையுலகில் பலரும் குறை கூறி வந்தனர். இருபதாயிரம் தொழிலாளிகளுக்கு தலைவன் என்று கூறிக்கொண்டு இவர் நடத்தும் தன்னிச்சையான நடவடிக்கைகள் திரைத் துறையினருக்கே பிடிப்பதில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர்கள் அ‌ஜித், ர‌ஜினி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் பேசினார் வி.சி.குகநாதன். இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெ‌ரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட‌த் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இதுவரை ஒற்றுமையாக செயல்பட்டு வந்தோம். ஆனால், சமீப காலமாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தன்னிச்சையாக செயல்பட்டு ஒற்றுமைக்கு இடைவெளி ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் எங்களை கலந்து பேசாமல் நடிகர், நடிகைகள் ஊர்வலம் என்று பேட்டியளித்தார். பின்னர், விழாவில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இப்போது ஒரு பேட்டியில் எங்கள் உறுப்பினர்களான நடிகர், நடிகைகளை ம‌ரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாக‌ப் பேசியுள்ளார். இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தயா‌ரிப்பாளர் சங்கம் பெப்சி தலைவ‌ரின் செயல்பாட்டை‌க் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.