ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சிங்கம் புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரவுத்ரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் ஜீவா. அதற்குள் கே.வி.ஆனந்தின் கோ குறுக்கிட ரவுத்ரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், ரவுத்ரத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன. ஜீவா ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
கந்தசாமி, ஜக்குபாய் படங்களில் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் வாய்ப்பு மட்டும் வரவில்லை. ஆர்யாவுடன் நடித்துவரும் சிக்குபுக்கு மட்டுமே கையிலிருக்கும் ஒரே வாய்ப்பு.
இந்நிலையில்தான் ஜீவாவின் ரவுத்ரம் வாய்ப்பு ஸ்ரேயாவை தேடி வந்தது. கப்பென்று பிடித்தவர் வழக்கம் போல இந்தியில் பிஸி, தெலுங்கில் ஆறு படம் என்று புள்ளி விவரம் தருகிறார். நம்புவோம்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.