அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற தனது தீர்மானத்தை கைவிட்டிருக்கிறது பெப்சி அமைப்பு. கலையுலகின் பிதாமகன் கலைஞர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், சிலர் தங்களை அரசியல் சார்பான விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்து நின்று கைத்தட்டினார் ரஜினி. இது திரையுலக சங்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜாகுவார் தங்கம் என்பவர் அஜீத்தை ஒருமையில் திட்டி பேட்டி அளித்ததோடு அஜீத், ரஜினியின் பூர்வீகத்தை சந்திக்கு இழுத்து இதனை இன ரீதியிலான பிரச்சனையாக மாற்ற முயன்றார். இதற்கு சில லெட்டர்பேட் கட்சிகளும் சாதி சங்கங்களும் தங்களது மேலான ஆதரவை தெரிவித்து பிரச்சனையை விசிறிவிட்டன.
அஜீத் முதல்வரை சந்தித்து தனது விளக்கத்தை தெரிவித்த பிறகு பிரச்சனை பெரிதானது. தேவைப்பட்டால் மிரட்டுவோம் உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார் வி.சி.குகநாதன். ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் அவர் பேசியதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி வேலைநிறுத்தம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.
இந்நிலையில் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அஜீத் தனது உண்மையற்ற பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிட்டன. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமானால் சினிமாவைவிட்டே போய் விடுகிறேன் என்று தனது நிலைப்பாட்டில் அஜீத் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிடுவதாகவும், ரஜினி, அஜீத் படங்களுக்கு தடையில்லா ஆதரவு வழங்குவதாகவும் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
ஜாகுவார் தங்கம் போன்ற நபர்கள் உரக்க கூச்சலிட்ட போதும், உதிரி அரசியல் மற்றும் சாதி சங்கங்கள் அலம்பல் செய்த போதும் மௌனமாகவே இருந்தார் அஜீத். அந்த மௌனமே இன்று அவருக்கு இந்த பிரச்சனையில் சாதகமான வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.