மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சோனியா அகர்வால் மலையாளத்தில்

செல்வராகவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு முன்பே தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சோனியா அகர்வால். மொத்தமாக பிரிந்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார்.

திருமணமானவர்களுக்கு கோடம்பாக்கம் அக்கா, அண்ணி, அம்மா வேடம்தானே கொடுக்கும்? எனக்கு இன்னும் இளமை இருக்கிறது, அதனால் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று உறுதியாக சோனியா கூறியதால் தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேநேரம் மலையாளப் படவுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறது.

மலையாள திரையுலகம் திருமணத்தை ஒரு பொருட்டாக பார்ப்பதில்லை. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார் தேவயானி. இன்னும் இதுபோல் நிறைய உதாரணங்கள் கூற முடியும்.

சோனியா நடிக்கவிருப்பது சுரேஷ்கோபிக்கு ஜோடியாக. சுரேஷ்கோபியின் வழக்கமான மசில் படம்தான் இதுவும். டி.எஸ்.சுரேஷ்பாபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

திருமணத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.