ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கிரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றியிருக்கும் இந்த ஐபிஎல் போட்டிகள், தொடங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர். கிரிக்கெட் நடக்கும் தினங்களில் ரசிகர்கள் திரையரங்குக்கு வரமாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.
ஐபிஎல் போன்ற போட்டிகளால் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை தள்ளி வைப்பதுபோல் இவர்கள் திரையரங்கை மூடிவிட்டு செல்ல முடியாது. பத்தே பேர் வந்தாலும் நாலு ஷோ நடத்தியாக வேண்டும்.
இதன் காரணமாக சில திரையரங்கு உரிமையாளர்கள் கிரிக்கெட்டையே திரையரங்குகளில் ஒளிபரப்பும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதற்கு சென்னையில் நல்ல வரவேற்பு. ரசிகர்கள் பெரிய திரையில் கிரிக்கெட்டை காண குழுமினர். திரையரங்குகளின் நஷ்டமும் தவிர்க்கப்பட்டது.
ஆனால் இந்தமுறை இப்படி திரையரங்குகளில் கிரிக்கெட்டை ஒளிபரப்பக் கூடாது, அப்படி ஒளிபரப்புவதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இதனை வலியுறுத்தி சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசயிருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தெரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.