
இந்நிலையில் ஆடியோ விழாவிலேயே ஆவேசமாக பேசும் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் நேற்று தனது கருத்துகளை ஆவேசமுடன் வெளியிட்டார். அதன் சாராம்சம் வருமாறு :
விளையாட்டு என்பது உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான அங்கம். அதற்கு காரணம் விளையாட்டுப் போட்டிகளில் தேசப்பற்று இருப்பதுதான். ஆனால் சமீபமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பெரும் பண முதலைகள் நடத்துகின்றன. லாபம் சம்பாதிக்க நடத்தப்படும் இந்தப் போட்டிகளால் தேசப்பற்று நாசமடைந்துவிட்டது.
மரபணு மாற்றம் போல் சென்னை அணியில் பாகிஸ்தான் வீரர் என்றும், கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய வீரர் என்றும் விளையாட்டுகளை ஈனப்படுத்திவிட்டனர்.
கலைப்புலி ஜி.சேகரன் சொன்னவை அனைத்தும் உண்மை. அதேநேரம் சென்னை டீமில் பாகிஸ்தான் வீரர் இருப்பதுபோல் தமிழ் சினிமாவான கோவா, ஜக்குபாய் போன்ற படங்களில் வெளிநாட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவும் தேசப்பற்றை ஈனப்படுத்தும் விஷயமா? கலைப்புலிதான் கருணைகூர்ந்து விளக்க வேண்டும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.