அஜீத்தையும், ரஜினியையும் பெயர் குறிப்பிடாமல் பகிரங்கமாக மிரட்டினார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். எங்களை எதிர்த்தால் இவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்ய முடியும் என்று அவர் பேசியது திரையுலகினரையும், ரஜினி, அஜீத் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாக அஜீத் கூறியது வி.சி.குகநாதன் போன்ற சங்க நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியை இன்று சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கேட்க முடிந்தது.
படத்தையோ, படத்தின் ஆடியோவையோ பற்றி பேசாமல் வி.சி.குகநாதன் தனது கோபத்தை கொட்டத் தொடங்கினார்.
திரைப்பட அமைப்பு என்பது அரசியல் கட்சி என்றால் அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் தொண்டர்களின் கடமை. அது தெரியாமல் சிலர் விதாண்டவம் பேசுகிறார்கள் (அஜீத்). இவர்களுக்கு சிலர் (ரஜினி) ஆதரவு.
ஊரோடு ஒத்துப் போக வேண்டும். முடியாது எதிர்த்துதான் நிற்போம் என்றால் இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேமாதிரி இருக்கும் இடம் இல்லாமலும் செய்ய முடியும். நாங்கள் பண்பாகவும் கேட்போம், பணிவாகவும் கேட்போம், மிரட்டியும் கேட்போம். இவர்களால் எங்களை என்ன செய்ய முடியும்? அப்படியும் கேட்காவிட்டால் இவர்களை ஓரம்கட்டும் வழியும் தெரியும். இவர்களால் என்ன செய்ய முடியும்?
இப்படி பகிரங்கமாக நடிகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் வி.சி.குகநாதன். நாங்க யாரை சொல்றோம் என்று உங்களுக்கே தெரியும் என்று எடுத்துக் கொடுத்தார் வி.சி.குகநாதனுக்குப் பிறகு பேச வந்த கலைப்புலி ஜி.சேகரன்.
அஜீத்தை யார் மிரட்டினார்கள் என்பது இப்போது ஊருக்கே தெரிந்திருக்கும் நடிகர் சங்கமும், தமிழக முதல்வரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.