2010ல் இதுவரை ஒரு டஜனுக்கும் மேல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நாம் சொல்வது நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை. மொழிமாற்றம் செய்யப்பட்டப் படங்களையும் சேர்த்தால் இரண்டு டஜன் தேறும்.
இந்த அதிகபட்ச அறுவடையில் லாபம் தந்திருப்பவை என்று பார்த்தால் மிக சொற்பமான படங்களே. சூப்பர் ஹிட் என்று சொல்லக் கூடிய எந்தப் படமும் இதுவரை வெளியாகவில்லை என்பது 2010ன் வருத்தத்துக்குரிய விஷயம்.
அஜீத்தின் அசல், தனுஷின் குட்டி, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற பெரிய படங்கள் முதல் தைரியம் போன்ற சின்னப் படங்கள் வரை அனைத்தும் ஏமாற்றத்தையே தந்துள்ளன. இந்த வருடத்தின் ஒரே ஆறுதல் தமிழ்ப் படம். போட்ட பணத்தை விட பல மடங்கு இந்தப் படம் வசூல் செய்துள்ளது. முதலுக்கு மோசம் செய்யாத இன்னொரு படம், கோவா. மெகா பிளாப் என்றால் அது சரத்குமாரின் ஜக்குபாய்.
மொழிமாற்றுப் படங்களில் அவதார் சாதனை படைத்திருக்கிறது. வாங்கியவர்கள் திரையிட்டவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஹாலிவுட் படம் லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது. என்றாலும் பி,சி சென்டர்களில் படத்தின் வசூல் சுமார் என்ற அளவிலேயே உள்ளது. மொத்தத்தில் இதுவரை வெளியான எந்தப் படமும் சூப்பர்ஹிட் என்ற முத்திரையை எட்டிப் பிடிக்கவில்லை என்பதே உண்மை.
இந்தியில் பா, 3 இடியட்ஸ், மை நேம் இஸ் கான் என தொடர்ச்சியாகப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பும் போது தமிழ்ப் படங்கள் சவலைக் குழந்தையாக இருப்பது கவலையளிக்கும் விஷயம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.