மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தம்பிக்கு இந்த ஊரு - மு‌ன்னோ‌ட்ட‌ம்

வி.கே.மீடியா சார்பில் ஜெ.சரவணன் மற்றும் சி.பாஸ்கர் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம், தம்பிக்கு இந்த ஊரு. பரத் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை பத்‌ரி இயக்கியுள்ளார்.

பரத் சிங்கப்பூ‌ரில் வசிப்பவர். தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருகிறார் ஹீரோயின் சனாகான். அவர் மீது பரத்துக்கு காதல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது பரத்தை காதலிப்பதாக கூறிவிட்டு விமானம் ஏறுகிறார் சனாகான். அவரைத் தேடி தமிழகம் வருகிறார் பரத். வந்த இடத்தில் நடக்கும் களேபரங்கள்தான் தம்பிக்கு இந்த ஊரு படத்தின் கதை.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் விசேஷ அனுமதி வாங்கி சில காட்சிகளையும், ஒரு பாடல் காட்சியையும் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பரத்தும் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். சனாகானுடன் மாடல் ஷாவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், ரஞ்சித், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், சரண்யா, பொன்வண்ணன், யுவராணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் படங்களுக்கு சண்டைப் பயிற்சி அமைத்துக் கொடுக்கும் ‌ஜிம்மிலோ இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார். பரத்தைப் பார்த்து அவரது திறமையை சோதித்தப் பிறகே படத்தில் அவர் பணியாற்ற சம்மதம் தெ‌ரிவித்தாராம்.

சாலை மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய தரண் இசையமைத்திருக்கிறார். வரும் 5ஆ‌ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.