விஜய்யின் சுறா படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட தீர்மானித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். அனேகமாக படம் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.
வேட்டைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது சுறா. விஜய்யின் 50வது படம் என்பதால் எக்ஸ்ட்ரா கவனம் எடுத்து படத்தை செதுக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் ராஜகுமார், அழகர்மலை படத்தை இயக்கியவர்.
வடிவேலு, தமன்னா என்று வெயிட்டான நட்சத்திரங்களுடன் தயாராகியிருக்கும் சுறாவின் சில பகுதிகளை மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் மெயின் கதை வேறு. மீனவர்கள், கடல் என்று விஜய் இதுவரை புழங்காத ஏரியா.
தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த மாதமே திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் உற்சாகமாக. படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் காட்டும் ஆர்வமும், அவசரமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஏப்ரல் 14 படத்தை திரையில் பார்க்கலாம் என்கிறது விஜய் தரப்பு.
ரசிகர்களுக்கு தீபாவளி ஏப்ரலிலேயே வருவது நல்லதுதானே.

சுறா சுருங்கி இராலாகாமல் ஓடினால் சரிதான் ஏன்னா இப்போ வார படம்களில் வரும் சண்டை காட்சிகளும் பாடல்களுமே படம் படுக்க காரணமாகிறது எல்லாம் சரி பஞ்ச டயலாக் இல்லாமல் இருந்தாலே போதுமானது எப்போதான் ஹிரோக்கள் பறந்தது பறந்தது அடிக்கிறதா விடப்போரன்களோ
ReplyDelete