வெள்ளிக்கிழமையான நேற்று மொத்தம் ஆறு படங்கள் திரைக்கு வந்துள்ளது. நேரடித் திரைப்படங்கள், இந்தி மற்றும் ஆங்கில மொழிமாற்றுப் படங்கள் என அனைத்தும் இதில் அடக்கம்.
ஜீவா நடிப்பில் திரைவண்ணன் இயக்கியிருக்கும் கச்சேரி ஆரம்பம் நேற்று வெளியாகியுள்ளது. ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். பூனம் பஜ்வா ஹீரோயின். ஜீவாவுடன் முதல் முறையாக இணைந்து காமெடி செய்திருக்கிறார் வடிவேலு. ஆறு படங்களில் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கே என்பது குறிப்பிடத்தக்கது.
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கும் புதுமுகங்களின் காதல் படமான முன்தினம் பார்த்தேனே இன்று திரைக்கு வந்துள்ளது. அறிமுகமில்லாத நடிகர்கள், இயக்குனர் என்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பில்லை. இத்துடன் செல்வேந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஒரு காதலன் ஒரு காதலியும் இன்று வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படமான ரீஜியன் கருடயுத்தம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் சண்டைகள் நிறைந்த படம் என்பதால் சிறுவர்களை இப்படம் கவர வாய்ப்புள்ளது.
இதுதவிர மகேஷ்பட்டின் அட்வென்சர் த்ரில்லர் ஷாபித் சாபம் என்ற பெயரிலும், நேகா துபியா நடித்த இந்திப் படம் ஜூலியும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளன.
இவற்றில் எந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறப் போகிறது என்பது இரண்டு தினங்களில் தெரிந்துவிடும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.