ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம், கச்சேரி ஆரம்பம். சௌத்ரியின் இளைய மகன் ஜீவா ஹீரோ.
தெனாவட்டு பாணியில் தயாராகியிருக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு இந்தப் படம். ஹீரோயினாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். “தெனாவட்டில் ஜீவா, பூனம் பஜ்வா காம்பினேஷன் சிறப்பாக இருந்தது. அதனால் இந்தப் படத்திலும் பூனம் பஜ்வாவையே ஹீரோயினாக்கினேன்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் திரைவண்ணன்.
திரைவண்ணனுக்கு இது முதல் படம். பூபதி பாண்டியன், செல்வபாரதி, சீமான் ஆகியோரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிந்தவர். எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது என்கிறார் உற்சாகமாக.
டி.இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.வைத்தி. நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். நவீன கேமரா, காஸ்ட்லி செட்கள் என பாடல் காட்சிகளை கலர்ஃபுல்லாக எடுத்துள்ளனர். படத்தின் முக்கியமான ஹைலைட், ஆக்சன் காட்சிகள். ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கிறாராம் ஜீவா.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.