தங்கவேல் இயக்கி நடிக்கும் ப.ரா.பழனிச்சாமி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் பிரபுதேவா.
பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆடுவது புதிதல்ல. ஜென்டில்மேன் படத்தில் அவர் ஆடிய சிக்குபுக்கு ரயிலேதான் அவரது திரைவாழ்க்கையின் முதல் பிரகாசமாக அமைந்தது.
நடிகர், இயக்குனர் என்று படிப்படியாக உயர்ந்த பிறகு ஒரு பாடலுக்கு அவர் ஆடியதில்லை. ஒரு பாடலுக்கு ஆடும்படி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை என்றும் சொல்லலாம். இந்நிலையில் தங்கவேல் என்பவரின் படத்தில் எப்படி ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டார் பிரபுதேவா?
இந்தப் படத்தில் பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் கதையே அவரைச் சுற்றிதான் பயணிக்கிறதாம். தந்தை நடிக்கும் படம் என்பதால் ஒரு பாடலுக்கு ஆடும் சலுகையை வழங்கியிருக்கிறார் பிரபுதேவா. அவருடன் இணைந்து ஆடுவது அவரது அண்ணன் ராஜு சுந்தரம்.
நேற்று அது உனக்கு இன்று அது எனக்கு நாளை அது யாருக்குன்னு தெரியுமா... என்று தத்துவமாகத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு நடனம் அமைப்பவர் மாஸ்டர் ஸ்ரீதர்.
சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவா, ராஜு சுந்தரம் என மூன்று மாஸ்டர்கள் இருந்தும் நடனம் அமைக்கும் பொறுப்பை ஸ்ரீதரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ரொம்பப் பெரிய மனசுதான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.