கமல் நடித்த சில படங்கள் தமிழிலும் இந்தியிலும் ரீமேக் ஆகின்றன. இந்தப் படங்களில் நடிக்க ஸ்ருதிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் படம் இயக்குவதற்கான ஆயத்தங்களில் இருக்கிறார். முதல் படமாக அப்பாவின் சிவப்பு ரோஜாக்களை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கமல் வேடத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று அவரை கொஞ்ச நாள் சுற்றி வந்தார் மனோஜ். பாலா படத்தில் ஆர்யா பிஸியாக இப்போது அவர் பிடித்திருப்பது பி.வாசு மகன் ஷக்தி. ஷக்திக்கு ஜோடியாக நடிக்க கமல் மகள் ஸருதி ஹாசனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.
மனோஜ் நாயகனாக அறிமுகமான தாஜ்மஹாலில் மணிரத்னம், ரஹ்மான் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பணிபுரிந்தனர். அதேபோல் மனோஜ் இயக்கும் முதல் படத்தில் இயக்குனர்கள் அமீர், சேரன் இருவரும் பணியாற்றுகிறார்கள். இதில் ஒருவர் திரைக்கதை அமைக்க இன்னொருவர் வசனம் எழுதுகிறார்.
கமல் இந்தியில் நடித்த ஏக் துஜே கேலியே ரீமேக் செய்யப்படுகிறது. கமலுடன் நடித்த ரதியின் மகன் தனுஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் கேட்டிருக்கிறார்கள்.
மேலே உள்ள எந்தப் படத்துக்கும் இதுவரை ஸ்ருதி கால்ஷீட் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.