தெலுங்கில் வெளியான விக்கிரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல் வாங்கியுள்ளார். அவரது ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரிக்கிறது.
தமிழ் ரீமேக்கிற்கு சிறுத்தை என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். ஹீரோ, கார்த்தி. முதலில் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்துக்கு பிறகு தெனாவட்டு கதிரை ஒப்பந்தம் செய்து பத்து லட்சம் அட்வான்சும் கொடுத்தனர்.
கார்த்தியை இயக்கும் வாய்ப்பு என்பதால் தெனாவட்டுக்குப் பிறகு ஜீவாவை வைத்து மீண்டும் படம் இயக்க வந்த வாய்ப்பை நிராகரித்தார் கதிர். மேலும் சில வாய்ப்புகளை சிறுத்தைக்காக இவர் விட்டுக் கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கதிரிடம் சொல்லாமல் சிறுத்தையின் இயக்குனரை மாற்றியிருக்கிறார்கள். தற்போது கதிருக்குப் பதில் சிவா என்பவர் சிறுத்தையை இயக்குகிறார். அத்துடன் கதிருக்கு கொடுத்த அட்வான்ஸையும் திருப்பிக் கேட்டு நெருக்கியிருக்கிறார்கள். கடுப்பான கதிர் பிரச்சனையை இயக்குனர் சங்கத்துக்கு எடுத்துச் சென்றார்.
சில நாள் பஞ்சாயத்துக்குப் பிறகு கதிர் அட்வான்ஸை தர வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறியிருக்கிறது சங்கம். கதிரை காத்திருக்க வைத்ததற்கான பெனால்டி.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.