மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாங்காகில் அர்ஜுன் சண்டை பயிற்சி

சாதா ஹீரோவாக இருக்கும் போதே நாற்பது பேரை நலுங்காமல் அடிப்பார் அர்ஜுன். வல்லக்கோட்டையில் இவர் சூப்பர் ஹீரோ. மொத்த ஸ்டண்ட் நடிகர்களையும் இறக்கினாலும் பத்தாது.

அர்ஜுனை வைத்து வாத்தியார், துரை படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வல்லக்கோட்டையை இயக்குகிறார். கதை, கதாபாத்திரங்களை விட இந்தப் படத்துக்கு சண்டைக் காட்சிகள்தான் முக்கியம். அதனால் ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷும், அர்ஜுனும் பாங்காங் சென்று லேட்டஸ்ட் சண்டைகளில் பயிற்சி எடுத்து திரும்பியிருக்கிறார்கள்.

ஏ.வெங்கடேஷுக்கு இது முக்கியமான மாதம். அவரது இயக்கத்தில் உருவான மாஞ்சா வேலு, வாடா இரண்டும் இந்த மாதம் திரைக்கு வருகிறது. முதல் சூப்பர் ஹீரோ படம் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக அங்காடித்தெருவில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது வெங்கடேஷுக்கு. கிளவுட் நைன் என்பது இதுதானா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.