மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தனுஷின் சீடன்

தனுஷின் மலையாள ‌‌ரீமேக்கான சீடனின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. படத்தை இயக்குகிறவர் சுப்பிரமணிய சிவா.

பிருத்விரா‌‌ஜ், நவ்யா நாயர் இருவருக்கும் அறிமுகப் படமாக அமைந்தது நந்தனம். நவ்யா நாயர் வேலைக்கார வெகுளிப் பெண்ணாக நடித்த இந்தப் படத்தில் குருவாயூரப்பனாக சிறிய வேடம் ஒன்றில் அரவிந்த் ஆகாஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தையே தமிழில் சீடன் என்ற பெய‌ரில் ‌ரிமேக் செய்து வருகிறார்கள்.

நந்தனத்தில் பிருத்விரா‌‌ஜ் நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் புதுமுகம் கிருஷ்ணா. நவ்யா நாயர் நடித்த வேடத்தில் அனன்யா. அரவிந்த் ஆகாஷின் கடவுள் வேடத்தை ஏற்றிருப்பவர் தனுஷ்.

கடவுள் வேடத்தில் தனுஷ் நடிப்பதால் நந்தனத்தில் சிறிதாக இருந்த இந்த வேடத்தை தமிழில் சற்றே பெ‌ரிதாக்கியிருக்கிறார்கள் (போச்சுடா). சீடனின் படப்பிடிப்பை சைலண்டாக தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார் சுப்பிரமணிய சிவா. தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.

மதுரை, கேரளா மட்டுமின்றி புவனேஷ்வ‌ரிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தை பிரபல மலையாளப் பட‌த் தயா‌ரிப்பாளர் மோகன் தயா‌ரிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.