
அணிகளை ஏலம் விட்டதில் அவர் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும், ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இத்தகைய புகார் காரணமாக கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பெரும்பாலானோர் மோடியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும், கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகரும் மோடி மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
இதனால் ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இப்பிரச்னை தொடர்பாக ஷரத் பவாருடன் விவாதிக்க டெல்லி வருமாறு லலித் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தாக பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தது.
மேலும் லலித் மோடியை பதவி விலகுமாறு கோர ஷரத் பவார் சம்மதித்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்தன.
இந்நிலையில் துபாயிலிருந்து இன்று மும்பை திரும்பிய மோடியிடம், இந்த செய்திகள் குறித்து கேட்டபோது, ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தாம் பதவி விலகப் போவதாக வெளியான செய்திகள் வெறும் யூகச் செய்திகளே தவிர, எந்த சூழ்நிலையிலும் தாம் பதவி விலகப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.